ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மறக்க முடியாத 1970(எழுபதுகள்)!!!

இலக்கணாவத்தை கற்பகவிநாயகர்!


இலக்கணாவத்தை மக்களின் நம்பிக்கைக்குரிய தெய்வமும், இலக்கணாவத்தை ஊரின் அடையாளச் சின்னமும் கற்பக விநாயகர் தான் என்று கூறுவதில் எந்தவிதமான ஜயமுமில்லை.
1970 காலப் பகுதியிலை(ஆண்டு சரியாக ஞாபகமில்லை) திருடர்களின் கைவரிசையினால் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவத்தினால் ஆலயம் இடித்து கட்டவேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தனர்.
இலக்கணாவத்தை மக்களின் கெட்ட காலமோ என்னவோ இந்த காலப்பகுதி முழுநாட்டு மக்களுமே பொருளாதார நெருக்கடியிலை மிகவும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதன் காரனமாக ஆலயத்தின் திருப்பணி வேலையும் ஜந்து, ஆறு ஆண்டுகள் என்று இழுத்தடித்துக் கொண்டே சென்றது, சுருக்கமாக சொல்லப் போனால் ஊர்மக்களிற்கு இதுவொரு வேதனைக்குரியதும், சோதனைக்குரியதுமான காலமுமாகவே இருந்தது.

இந்த நேரத்திலை தான் எதிர்பாராத விதமாக இரண்டு மூன்று சிறுவர்களாகிய நாங்கள், எங்கவூரிலை ஒரு கலைநிகழ்வு நடத்தவேண்டும் என்ற ஆசை கொண்டு(அதாவது பயமறியாத வயது) சிந்தித்து கலைவாணி விழா நடத்தும் திட்டத்தில் இறங்கினோம். இதற்கு முக்கிய காரனம் அயல் ஊர்களில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கலைவிழாக்கள் போன்றன எங்களது மனதை அளவுக்கு அதிகமாக பாதித்திருந்தன.
சரி தீர்மானித்தாச்சு இதை எங்கிருந்து ஆரம்மிப்பது என்று தெரியாது திணறிக் கொண்டிருந்த நாங்கள், ஆலோசனை கேட்பதிற்காகவும், அனுமதி கேட்பதிற்காகவும் அன்றைய ஆலய நிர்வாகசபை முக்கிய உறுப்பினர்களான சாதிலிங்கம், நவரட்ணம் என்ற பெரியோர்களை நாடிச்சென்றோம்.
எங்களது ஆசைகளையும், திட்டத்தையும் கேட்டறிந்த அவர்கள் உடனையே அனுமதியை தந்ததுமட்டுமன்றி தங்களது பங்களிப்பு என்ன என்பதையும் தெரிவித்தார்கள் அதாவது இதைமாதிரி ஆலயத்தையும் கட்டி முடிப்பது பற்றியும் முயற்சி எடுங்கள் என்ற நிபந்தனையுடன் சம்மதித்தார்கள்.
அன்றைய தினமே கலைவாணி விழாவிற்கு நிதிசேகரிப்பதிற்காக ஒரு கொப்பியுடன் வீடு வீடாக உலாவர ஆரம்பித்தோம், அப்போது அதாவது ஆரம்பத்தில் எங்களில் பலர் நம்பிக்கை வைக்காத காரனத்தினால் ஆதரவைத் தவிர எதிர்ப்புக்களே அதிகமாக இருந்தன. இருந்தும் நாங்கள் விட்டபாடில்லை இதை அதாவது எதிர்ப்புக்களை முறியடிக்கும் நோக்கத்திலை எங்களை விட மூத்த இளைஞர்களை அணுகினோம்(அருட்செல்வம், புஸ்பநாதன், ராமஜெயம், தர்மராஜா,சேதுராகவன் போன்றோர் உட்பட) .
நாங்கள் அணுகின ஒவ்வாருத்தரும் ஒத்துழைப்புத்தர முன்வந்து தனித்தனியாக ஒவ்வொரு பொறுப்புக்களையும் (ஒலியமைப்பு, மேடை, ஒளி, கலை நிகழ்வுகள்)பகிர்ந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி இடம்பெறவிருந்த நாள் நெருங்க, நெருங்க பிரச்சினைகளும் வேறு வழிகளிலை பெருகிக்கொண்டே இருந்தன இருப்பினும் பொறுப்புக்கள் சிறுவர்களாகிய எங்கள் கரங்களில் இருந்து இளைஞோர் கைக்கு மாறியதால் எல்லாமே இலகுவாகவே முடிந்தன.
வடமராட்சிலையே இடம்பெறாதளவுக்கு அதிசிறந்த நிகழ்வாகவும், அதி சனத்திரள் கொண்ட தரமான கலைநிகழ்வாகவும் இந்த கலைவாணி விழா அமைந்திருந்தது.

கலைவாணி விழா முடிந்ததும் ஆலயம் கட்டும் விடயம் பற்றி அன்றிருந்த மூத்த சகோதரங்கள்(ராமஜெயம், அருந்தவரட்ணம், சண்முகரட்ணம், சிவராசா, யோகராசா,தங்கராசா,மகேந்திரம் போன்றோர் உட்பட)முயற்சியில் இறங்கி உடுப்பிட்டியூர் யோகன் என்ற எங்கவூர் உறவின் ஆலோசனைப்படி "அமுதும் தேனும்" என்ற பெயரிலை ஒரு நிதியுதவி கலைநிகழ்ச்சியை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி திறந்த வெளியரங்கிலை வெற்றியுடன் நடாத்தி முடித்து போதியளவு நிதியையும் சேர்க்க கூடியதாகவிருந்தது.
இந்த நிதியுடனும், எங்கவூர் மக்களின் பங்களிப்புடனும் ஆலயம் விரைவாக கட்டி முடிக்கப்பட்டு 1979லை கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டதாகும்.
முக்கிய குறிப்பு: காலப்பகுதிகள் தவறாக இருப்பின் சரியானவற்றை அறியத் தரவும்.
நன்றி,
மு.லிங்கம்.

2 கருத்துகள்:

  1. அண்ணா இன்று தான் சாதப்பாவின் குட்டியண்ணை இதைப் பற்றி என்னுடன் கதைத்தவர் கதைத்து ஒரு மணித்தியாலம் கூட ஆகல... இப்படி பல சம்பவங்கள் எம் போன்ற இளம் சந்ததிகள் அறிய வேண்டியிருக்கிறது.. அத்துடன் அவணப்படுத்த வேண்டியுமிருக்கிறது... மற்றவர்களும் இதை புரிந்து தம் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்தால் ஆவணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்... நன்றி அண்ணா...

    பதிலளிநீக்கு
  2. நன்றி சுதா! இப்படியான பலவிடயங்களை பகிர்வதிற்கு விருப்பம் இருந்தாலும் காலங்கள், நேரங்கள் ஞாபகம் இல்லாததால் செயலிலை இறங்க முடியாதுள்ளது.

    பதிலளிநீக்கு

Loading...