திங்கள், 28 மார்ச், 2011

நான், எனது, எனக்கு!!!

அனைத்து உள்ளங்களிற்கும் முதற்கண் வணக்கம்!

இன்று சில விடயங்களை மனம்விட்டு உங்களுடன் பகிரலாம் என்ற நட்பாசையில் எனது நேரத்தை ஒதுக்கியுள்ளேன்.
நான், எனது, எனக்கு போன்ற வார்த்தைகளை உச்சரிப்பவனோ அல்லது எழுத்துக்களில் அதிகம் பயன் படுத்துகின்றவனோ தலைக்கனம் பிடித்தவன், சுய விளம்பரத்தை விரும்புகின்றவன் என்பதை பலரிடம் அனுபவ ரீதியாகவும், கேள்வியுற்றும் இருக்கின்றேன். இதுவரை காலமும் அந்த தவறுகளை இயன்றளவு தவிர்த்து வந்த நான் இன்று அந்த தவறிற்கு என்னையும் உட்படுத்தவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
அதாவது இன்று பகிரப்படவேண்டிய பல விடயங்களிற்கு அந்த அதாவது தவிர்க்கப் படவேண்டிய சொற்கள் பாவிக்கவேண்டிய அவசியமுள்ளது.

முதலில் மார்ச்26, சனிக்கிழமை எனது 25வது திருமண ஆண்டு நாளையிட்டு தனிமடலிலும், முகப்புத்தகத்திலும், தொலைபேசியிலும், நேரிலும் வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகளிற்கும், வாழ்த்த மறந்த, மற்றும் இவனை வாழ்த்தக்கூடாது என்ற நல்ல மனம் படைத்த உறவுகள் உட்பட அனைத்து உறவுகளிற்கும் எனது குடும்பத்தின் சார்பில் பலகோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மார்ச்25 அதாவது எனது திருமண நாளிற்கு முதல்நாள் கணினியை திறந்தபோது எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
எனது சகோதரன் (அல்லது அதற்குமேல் சொற்பதம் இருந்தால் அதையே பயன்படுத்தலாம் ) சுதா தில்லையம்பலம் அவர்கள் அணுகுண்டு மாதிரி ஒரு தகவலை பதிந்திருந்தார் http://www.facebook.com/?ref=home#!/topic.php?uid=333770126646&topic=16319  இதைப்பார்த்ததும் எனது உணர்வுகளை ஒருகணம் இழந்தேன் என்ன எழுதுவதென்றே தெரியல்லை ஆதலால் தலை மறைவாகிவிட்டேன் பல வாழ்த்துக்கள்http://www.facebook.com/?ref=home#!/permalink.php?story_fbid=1456866201284&id=1822231907 வந்து குவிந்தன எதற்கும் நன்றி சொல்லமுடியாத http://www.facebook.com/?ref=home#!/profile.php?id=1822231907  உணர்வில் அதாவது அதிர்ச்சியில் இருந்தேன்.

சுதாவை நான் நேரில் பார்த்த ஞாபகமே இல்லை நான் விரும்பியது சுதாவையல்ல அவரது முற்போக்குத் தனமான குணங்களும், சிந்தனைகளும் அவரது எழுத்தாற்றல்களையும் தான் முதலிலை காதலித்தேன்.
இதற்கு காரனம் எனது நோக்கமும், சிந்தனையும், கொள்கைகளும் அவரினதுடன் ஒத்தவையாகவே இருந்தன, எனது கனவுகளையும், நோக்கங்களையும் அவர்மூலம் நிறைவேற்ற முடியும் என்று இனங்கண்டுகொண்டேன்.
அதற்கப்புறம் தான் அவர் எனது நெருங்கிய உறவு என்பதை அறிந்துகொண்டேன் என்பது தான் உண்மை.

எமதூர் மக்களை இணைக்கவேண்டும், எல்லோர்கள் மத்தியிலும் ஏதாவதொரு வகையில் இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற பலவிதமான வழிகளில் சிந்தித்தேன், முயற்சித்தேன் இறுதியாக கிடைத்தது தான் இந்த முகப்புத்தக குழுமம்.
இதை ஆரம்பித்தபோது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்தனே ஒழிய இவ்வளவு சீக்கிரத்திலை இப்படியான ஒரு பெரு வெற்றியளிக்கும் என்று எதிர் பார்த்திருக்கவில்லை.
இந்த வெற்றியிற்கு அனைத்து உறவுகளும் பங்காளியாகியுள்ளார்கள், அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்திலை நன்றிகள் தெரிவிக்க ஆசைப்படுகின்றேன்.

இந்த வருடம் எங்கள் ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழா நிகழ்வுகளை புலம்பெயர்ந்த மக்களிற்கு தரிசனமாக கிடைக்க வழிசமைத்த அனைத்து உறவுகளிற்கும் கற்பக விநாகயகரின் அருள் நிச்சியம் கிடைக்கும்.
http://katpahaththaan.blogspot.com/  இந்த வேலைத்திட்டங்களில் பங்காற்றிய அனைத்து உறவுகளிற்கும் முக்கியமாக குகன்(அதாவது வதனியக்காவின் மகன்), சுதா, ரமணன், சிந்துஜன், பவதாரனி, தினுஷன்  உட்பட அனைவருக்கும் புலம்பெயர்ந்த இலக்கணாவத்தை மக்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்கவூருக்கு பல நல்ல விடயங்களை செய்வதிற்கு "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா" கிளையினர் தயாராகவும் ஆர்வமாகவும் உள்ளனர் என்பதை அண்மையில் கூட்டப்பட்ட நிர்வாக கூட்டத்தின் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது.
இருப்பினும் தாயகத்திலை இருக்கின்ற எங்கவூர் உறவுகள் முக்கியமாக இளைஞர்கள் தங்களிற்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்தவேண்டும்.
எங்களது பெற்றோர் காலத்தின்போது இடம்பெற்ற மாதிரி நான் பெரிசு நீ பெரிசு என்ற வேற்றுமைகளை களைந்து ஒருவர் செய்ய முற்படும் நல்ல விடயங்களிற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும்.
அதேபோல் முதியோர் தங்களது கவனங்களை ஆலயத்திலை மட்டும் செலுத்தாது இளைஞோர் எடுக்கும் ஊர் முன்னேற்ற விடயங்களிற்கு அதாவது வாசிகசாலை, பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாக இப்படி பல திட்டங்களிற்கு ஒத்துழைப்பு கொடுக்க முன்வரவேண்டும்.
அப்படி உங்களிற்குள் ஒரு ஒற்றுமை அல்லது கூட்டு ஏற்படும்போது தான் இங்குள்ள உறவுகளிற்கு ஒரு நம்பிக்கையும், ஊக்கமும் ஏற்படும். எங்களது செயல் திட்டங்களை இலகுவாகவும், விரைவாகவும் செய்ய ஏதுவாகவும் இருக்கும்.

சிந்தியுங்கள், செயல்படுங்கள், அனுப்புங்கள் உங்கள் திட்டங்களையும் அதன் தேவைகளையும் நிறைவேற்ற நாங்கள் முயற்சிக்கின்றோம்.

இணைவோம் உறவுகளாய், உறவுகளுக்காக1

நன்றி,
மு.லிங்கம்.


7 கருத்துகள்:

  1. என் குடும்பம் சார்பாகவும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்,,, முயற்சி செய்யும் போது இப்படி பல பழிச்சொற்கள் வரும் அதை தாண்டி வெற்றி பெறும்போது மற்றவர்கள் அதன் பெறுமதி உணர்வார்கள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி தம்பி!
    நான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும், பதியும் ஆக்கத்திற்கும் உங்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவும் ஊக்கமும் மறக்க முடியாதவை,என்னைப் பொறுத்தவரை பெறுமதி மிக்கவை.
    நன்றி,
    மு.லிங்கம்.

    பதிலளிநீக்கு
  3. தெளிவான குறிக்கோளே வெற்றியின் ஆரம்பம்.நாம் விரும்புகின்ற ஒவ்வொரு சிந்தனையும் நமது விருப்பப்படியே அமையும். நாம் விரும்பாத எந்தச் சிந்தனையும் தானாகவே தோன்றாது. நல்ல சிந்தனையை நினைக்க வேண்டிய அதிகாரமும் உரிமையும் நம்மிடம் இருக்கும் பொழுது எப்பிடியும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் மாமா ..அத்துடன் உங்களோடு இணைந்து மறைந்து நல்லதை நினைக்கும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நன்றி குகன்!
    உங்க வயதிற்கும், உங்க சிந்தனைகளிற்கும் இடையில் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.
    உங்க வயதில் பலர் திசைமாறி, தடுமாறி ஏதேதோ வழிகளில் செல்லும்போது நீங்க பொதுவிடயங்களில் உங்களை ஈடுபடுத்துவது பெருமைப்படக்கூடிய விடயமாகும்.
    பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும்.

    நன்றி,
    மு.லிங்கம்.

    பதிலளிநீக்கு
  5. அண்ணா தங்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும்... அதற்கு கடவுளின் தணை எப்போதும் இருக்கும்... தங்கள் வாழ்வும் என்றும் சிறக்க எனதும் என் குடும்பத்தாரதும் வாழ்த்துக்கள்...

    ஃஃஃஃதாயகத்திலை இருக்கின்ற எங்கவூர் உறவுகள் முக்கியமாக இளைஞர்கள் தங்களிற்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்தவேண்டும்.ஃஃஃஃ

    தங்களின் எந்தச் செயற்பாட்டிற்கும் ஒரு நல்ல ஊடகமாக இருக்க தயாராக இருக்கிறேன்... நான் ஒரு ச5கவியல் எழுத்தாளன் என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமே...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு
  6. சுதா நான் சொல்ல வாறது என்னவென்றால் நான் நிறைய உங்களிடம் எதிர்பார்க்கின்றேன் ஆனால் கொஞ்ச நாளாக நீங்க ஆமை வேகத்திலை இயங்கிறமாதிரி நான் உணர்கின்றேன்.
    உங்க மனதிலை சிலவேளை சில கசப்பான சம்பவங்கள் துன்புறுத்தலாம் அதை ஒரு விபத்தாகவே எடுங்க...தயவுசெய்து உங்களது அடுத்த திட்டத்தை தெரிவியுங்க...

    பதிலளிநீக்கு
  7. அண்ணா ஒடும் நதியில் எதிரே படகோட்டியால் மலை தான் வந்து முட்டும்... அதன் போக்கில் ஓட்டினால் சமுத்திரமே கையணைக்கும்.... விளங்குமென்று நினைக்கிறேன் மிகுதி தனி மடலில்...

    பதிலளிநீக்கு